H3N2 வைரஸ் காய்ச்சல், அடுத்த கோவிட் ஆக மாறுமா? நிபுணர்களின் கருத்து.!

Default Image

தற்போது அதிகமாக பரவி வரும் H3N2 வைரஸ் காய்ச்சல், அடுத்த கோவிட் ஆக மாறுமா என்பது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்…

h3n3 covid 19

 

பாதிப்பை ஏற்படுத்துமா H3N2?:                                                                          H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், இது அடுத்த கொரோனா தொற்றாக உருவெடுக்குமா என்று மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சமீபத்திய H3N2 வைரஸ் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் மக்களைப் பாதிக்கிறது, இது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் மருத்துவர்கள் பல்வேறு வழிகளில் முறையான அணுகுமுறைகளை தெரிவிப்பதன்மூலம் பொதுமக்களுக்கு தேவையான உறுதி அளித்துவருகின்றனர். இது குறித்து டெல்லி மருத்துவர் டிரேன் குப்தா, கூறுகையில் கடந்த முறை கொரோனா தொற்றின் போது ஏற்பட்ட லாக்டௌன் தற்போது இல்லாததால் இந்த புதிய வைரஸின் தோற்று குழந்தைகளை அதிக அளவில் பாதித்து வருகிறது.

H3n2 noevidens

அச்சம் தேவையில்லை:                                                                              மற்றொரு மருத்துவரான டெல்லியைச்சேர்ந்த சுவாசவியல் நிபுணர் எஸ்.கே. சாப்ரா கூற்றுப்படி, COVID-19 க்கும் புதிய வைரஸ் காய்ச்சலுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை, இரண்டும் சுவாச நோய்த்தொற்றுகள் என்பதால் ஒரே மாதிரியாக பரவுகின்றன. கோவிட்-19இன் லேசான அறிகுறிகள், H3N2 வைரஸ் காய்ச்சலின் லேசான அறிகுறிகளைப் போன்றே இருக்கின்றன, தவிர வைரஸ் காய்ச்சலுக்கு சளி, உடல்வலி மற்றும் தலைவலி போன்றவை ஏற்படுகின்றன.

வைரஸ் பரவல்:                                                                                                  மேலும் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த புதியவகை வைரஸால் பாதிக்கப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினார். COVID-19 மற்றும் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் இரண்டையும் ஒப்பிடும்போது இரண்டும் சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் ஒரே மாதிரியான முறையின் மூலம் பரவுகின்றன.

ஆனால் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இந்த H3N2 வைரஸ்  அதிக ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸிற்கு இதுவரை 3038 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. ஹரியானா மற்றும் கர்நாடகாவில் சேர்த்து 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

பருவகால காய்ச்சல்:                                                                        சமீபகாலமாக பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் பொதுவாக ஜனவரி முதல் மார்ச் வரையிலும், மழைக்காலத்திற்குப் பிறகும் தோன்றும் பருவகால காய்ச்சல், மார்ச் மாதத்திற்குப் பிறகு குறையும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வைரஸ் தொற்றைத் தவிர்க்க, மக்கள் கோவிட் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவும், நல்ல சுகாதார நடைமுறைகளைப் பராமரிக்கவும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்