பெங்களூரில் மீண்டும் ஊரடங்கு நீடிப்பா..? முதல்வர் தலைமையில் ஆலோசனை.!
பெங்களூரில் கடந்த ஜூன் 1 முதல் ஊரடங்கில் தளர்வு கொடுக்கப்பட்டது. இந்த தரளவுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் ஜூலை 14-ஆம் இரவு 8 மணி முதல் ஜூலை 22 -ஆம் தேதி (நாளை)காலை 5 மணி வரை ஊரடங்கு மீண்டும் விதித்தது.
பெங்களூரில் பிறப்பிக்கப்ட ஊரடங்கு நாளை அதிகாலை 5 மணிக்கு முடிவடைய உள்ளது. இதனால், பெங்களூரில் உள்ளவர்கள் மத்தியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெங்களூரில் விதிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிப்பது குறித்து கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் முடிவு செய்வார் என்று மருத்துவ கல்வி அமைச்சர் சுதாகர் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறினார்.
பல கர்நாடக அமைச்சர்கள் ஊரடங்கு நீட்டிப்பை நிராகரித்தனர். இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு எடியூரப்பா அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆலோசனைக்கு பின் தான் ஊரடங்கு நீடிக்கப்படுமா..? என்பது தெரியவரும்.
நேற்று வரை கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் 67,420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,403 பேர் உயிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.