பிப்ரவரி 14ஆம் தேதியை பசுக்களை கட்டிப்பிடிக்க சொல்கிறார்களே, மாடு எட்டி உதைத்து விட்டால் அதற்கு பாஜக அரசு இழப்பீடு வழங்குமா? – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி.
நாளை பிப்ரவரி 14 தினமானது உலகம் முழுக்க காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினமாக கடைபிடிக்க வேண்டும் என இந்திய விலங்கு நல வாரிய அமைப்பின் தலைவர் அறிக்கை வாயிலாக கேட்டுக்கொண்டார்.
பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினம் : இந்த அறிவிப்பை அடுத்து இணையத்திலும் சரி அரசியல் வட்டாரத்திலும் சரி பலவிதவிமர்சனங்களை இந்த அறிவிப்பு எதிர்கொண்டது. இதனை அடுத்து பிப்ரவரி 14ஆம் தேதி பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட வைக்கப்பட்ட இந்த கோரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
பாஜக அரசு இழப்பீடு : தற்போது, இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கூறுகையில், பிப்ரவரி 14ஆம் தேதியை பசுக்களை கட்டிப்பிடிக்க சொல்கிறார்களே, மாடு எட்டி உதைத்து விட்டால் அதற்கு பாஜக அரசு இழப்பீடு வழங்குமா? என கேட்டுக்கொண்டார்.
சட்ட ஒழுங்கு : மேலும் பேசுகையில். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அராஜக அரசை முடிவுக்கு கொண்டுவந்து மக்கள் அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என கூறினார். இந்தியாவிலேயே மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு சீராக இருக்கிறது எனவும், எல்லை பகுதிகளில் சிலர் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளதாகவும், அதனால், எல்லையோரப் பகுதிகளில் வசிக்கும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர் எனவும் குற்றசாட்டை முன்வைத்தார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…