நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் விதிக்கப்பட்ட ரூ.1 அபராதத்தை செலுத்த பிரசாந்த் பூஷண் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ பாப்டே இருசக்கர சொகுசு வாகனத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டர் பக்கத்தில், நீதிபதி ஹெல்மெட் அணியாதது குறித்தும், முகக்கவசம் அணியாதது குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதனையடுத்து, பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் கூறியது. மேலும், அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது .ஆனால் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக பிரசாந்த் பூஷன் தெரிவித்தார்.இதனையடுத்து பிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.
இன்று பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனையை அறிவித்தது உச்சநீதிமன்றம். அதன்படி,நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபராதம் விதிப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனை மற்றும் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றவும் தடை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.பின்னர் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அவரது பதிவில், நீதிமன்ற தீர்ப்பையடுத்து தனது மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான் பங்களிப்புடன் ஒரு ரூபாய் பெற்றுக்கொண்டதாக பதிவிட்டார்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பிரசாந்த் பூஷன் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.1 அபராதத்தை செலுத்துவதாக தெரிவித்தார் எனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி என்றும் நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறினார்.மேலும் நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்வேன்.நான் நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கில் டுவீட் செய்யவில்லை, என்னுடைய வேதனையையே வெளிப்படுத்தினேன், அதில் நான் உறுதியாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…