டெல்லி : இந்தியா சார்பாக சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் வீரர் , வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகவும், நேரில் அழைத்தும் பாராட்டுவது வழக்கமான ஒன்று. அதே போல, தற்போது நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கான பதக்கத்தை உறுதி செய்த வினேஷ் போகத்திற்கு வாழ்த்து தெரிவிப்பாரா என்று கேள்விகளும் எழுந்துள்ளது.
தற்போது பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை இந்திய வீரர் வீராங்கனைகள் 3 வெண்கல பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளனர். இந்தியாவுக்கான மேலும் ஒரு பதக்கத்தை இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தற்போது உறுதி செய்துள்ளார்.
வினேஷ் போகத், 50 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்த போட்டியில் நேற்று காலிறுதி போட்டியில் கடந்த டோக்கியோ ஒலிம்பிக் 2020 சாம்பியனான ஜப்பானை சேர்ந்த யுய் சுசாகியையும், அடுத்து அரையிறுதியில் கியூபாவின் யுஸ்னிலிஸ் குஸ்மானையும் தோற்கடித்து இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார். இதனால் எப்படியும் இந்தியாவுக்கு முதல் வெள்ளி பதக்கம் கிடைத்துவிடும். தங்க பதக்கம் எட்டிவிடும் தூரத்தில் உள்ளது.
கடந்த வருடம் இந்திய மலியுத்த வீரர்கள், வீராங்கனைகள் அப்போதைய பாஜக எம்பியும் , முந்தைய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்து கடுமையாக போராடினர். அந்த போராட்டத்தில் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உடன் களத்தில் நின்று போராடியதில் வினேஷ் போகத் முக்கியமானவர்.
இதனை குறிப்பிட்டு தான், தற்போது இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ள வினேஷ் போகத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிப்பாரா என்று மலியுத்த வீரர் பஜ்ரங் புனியா விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், வினேஷ் போகத்-திற்கு எந்த நேரத்தில் பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவிப்பார் என காத்துகொண்டு இருக்கிறேன். இப்போது அவள் ‘இந்தியாவின் மகள்’ ஆகிவிட்டாள். ஜந்தர் மாந்தர் பகுதியில் நாங்கள் போராடிய போது ஒரு வார்த்தை பேசாத அவர் (பிரதமர் மோடி) இப்போது வினேஷ் போகத்திற்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவிக்கும் தைரியம் எப்படி வரப்போகிறது என்று பார்க்க ஆவலாக உள்ளேன் என சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பஜ்ரங் புனியா விமர்சனம் செய்துள்ளார்.
அதே போல, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகையில், “வினேஷ் போகத் பாரிஸில் வெள்ளி அல்லது தங்கப் பதக்கம் வெல்லப்போவது உறுதி. அவருக்கு வாழ்த்து தெரிவிக்க பிரதமர் மோடி அவளை அழைப்பாரா? நிச்சயமாக அவளை வாழ்த்துவதற்காக அழைப்பார். ஆனால், அதைவிட முக்கியமாக மல்யுத்த போராட்டத்தின் போது டெல்லி காவல்துறையினர் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…
உடுமல்பேட்டை : பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி,…
மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி,…
சென்னை : இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை…
சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள்; வெண்டைக்காய் -300 கிராம் மிளகாய்…
எம்.எஸ்.தோனி : தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் சமூக…