மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்கிறாரா நிதிஷ்குமார்? வெளியான பரபரப்பு தகவல்!

nitish kumar

இந்தியா கூட்டணியில் உள்ள ஜேடியு தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் வரும் ஞாயிற்றுக்கிழமை பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வராக பதவியேற்கலாம் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகிறது. பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையும், 2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலையும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார்.

அதன்படி, 2020-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக, நிதிஷ்குமாரின் ஜேடியூ இணைந்து போட்டியிட்டன. பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் லாலுபிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சி 75 இடங்களிலும், பாஜக 74 இடங்களிலும் நிதிஷ்குமாரின் ஜேடியூ 43 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனால், பீகாரில் பாஜக, ஜேடியூ மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ்குமார் முதலமரனார்.

இதன்பின், கருத்து வேறுபாட்டால் 2 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவுடனான கூட்டணியில் இருந்து நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி விலகிய நிலையில், லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்ஜேடியுடன் கைகோர்த்தார். இதனால், ஆர்ஜேடி, ஜேடியூ, காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் இணைந்து நிதிஷ்குமார் தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்த சூழலில் வரும் நாடாளுமன்ற மக்களவையில் பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று ஒன்றை குறிக்கோளுடன் இருக்கும் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ்குமார் ஈடுபட்டார்.

40 வருடத்திற்கு பிறகு சாரட் வண்டியில் வந்த இந்திய ஜனாதிபதி…!

அதன்படி, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சுமார் 28 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவானது. இதில், நிதிஷ்குமார் முக்கிய பங்கு வகித்தார். இந்தியா கூட்டணியின் முதல் கூட்டமே பாட்னாவில் தான் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, பல்வேறு இடங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டது. ஆனால், சமீபகாலமாக ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் மீது நிதிஷ்குமாருக்கு அதிருப்தி இருப்பதாக தகவல் வெளியானது.

இதனிடையே, இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தன்னை தேர்வு செய்ய நிதிஷ்குமார் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக ஜேடியு தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் தொடர்பான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதில் குறிப்பாக ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறி பாஜகவுடன் மீண்டும் கைகோர்ப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், பாஜக ஆதரவுடன் ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் வரும் ஞாயிற்றுக்கிழமை பீகார் முதல்வராக பதவியேற்கலாம் என்றும் சுஷில் மோடிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் எனவும் தற்போது பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பீகார் மாநில சட்டசபையை கலைப்பது தொடர்பாக நிதிஷ்குமார் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நிதிஷ்குமாரின் இந்த திடீர் நடவடிக்கைகள் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இந்தியா கூட்டணியில் தான்..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்