மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா.? தீர்ப்பு தேதி அறிவிப்பு!

Manish Sisodia: மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவு.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கே.கவிதா ஆகியோர் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்.26ம் தேதி சிபிஐ கைது செய்தது.
அதேசமயம் அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ததால், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஓராண்டுக்கு மேலாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணீஷ் சிசோடியா பல்வேறு முறை ஜாமீன் கோரியும் டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இந்த சூழலில் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைதான முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு மீதான விசாரணை இன்று நிறைவு பெற்றது. அதன்படி, மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
RR vs KKR: அடுத்தடுத்த சரிந்த விக்கெட்டுகள்… பந்து வீச்சில் மிரட்டிய கொல்கத்தா.! ரன் அடிக்க திணறிய ராஜஸ்தான்.!
March 26, 2025
RR vs KKR : வெற்றிக்கான மோதல்! கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு… பிளேயிங் லெவனில் மாற்றம்.!
March 26, 2025
விடைபெற்றார் மனோஜ்… தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த மகள்..!
March 26, 2025