#BREAKING : காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து-அமித்ஷா
காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து தாற்காலிகமானது தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தின் முடிவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் வெளியிட்டார்.அதில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.மேலும் ஜம்மு -காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிகிறது என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பான விவாதத்தில் மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து தாற்காலிகமானது தான் என்று தெரிவித்தார்.காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிய பின்னர் அதற்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவித்தார்.