கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கேரள அரசு முழு முடக்கத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு முதலில் வந்த கேரளா தான்.முதலில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக அங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.நேற்று ஒரே நாளில் 1078 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,111 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் . இதனால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 9468-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6,164 பேர் குணமடைந்து உள்ளனர்.
ஒரு நாளைக்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் கேரள அரசு முழு முடக்கத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வருகின்ற திங்கள் கிழமை சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.இந்த கூட்டத்தில் முழு முடக்கம் அமல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான இறுதி முடிவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனும் முழு முடக்கம் அறிவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…
சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட்…
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம்…
சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என…