சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடருவேன் – அரவிந்த் கெஜ்ரிவால்
சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடருவேன் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.
டெல்லியில் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய மதுபானக்கொள்கையில், தனியார் அமைப்புகள் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு ஏற்றாற்போல இந்த மதுபானக்கொள்கை இருப்பதாகவும், இதனால் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில், சிபிஐ கைதை தொடர்ந்து டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறையும் கைது செய்து சிறையில் அடைத்தது. தொடர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த சமயத்தில், புதிய மதுபானக்கொள்கை தொடர்பான வழக்கில், நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று சிபிஐ சம்மன் அனுப்பியது. இந்த நிலையில், சிபிஐ சம்மனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் அளித்ததற்காக சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடருவேன் எனவும் கூறியுள்ளார்.
We will file appropriate cases against CBI and ED officials for perjury and producing false evidence in courts
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 15, 2023