புதுடில்லி: பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் இரண்டு நாட்களுக்குப் பிறகு வேலை செய்வதை நிறுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கான காரணம் என்னவென்று பார்கையில்,இந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி, இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) அனைத்து சமூக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது.
இந்தியாவில் ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்.அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இதன் மூலம் புகார் அளித்தல், ஆட்சேபிக்கத்தக்க உள்ளடக்கத்தை கண்காணித்தல், இணக்க அறிக்கை மற்றும் ஆட்சேபகரமான உள்ளடக்கத்தை நீக்குதல் போன்றவற்றை செய்ய அரசு நோக்கமாக கொண்டுள்ளது.இதுவரை, கூ( KOO) என்ற நிறுவனத்தைத் தவிர வேறு எந்த நிறுவனமும் அரசு சொன்ன வழிமுறைகளை பின்பற்றி அதிகாரிகளை நியமிக்கவில்லை.
மத்திய அரசின் இந்த புதிய விதிகளுக்கு எந்தவித பதிலையும் பேஸ்புக் ,ட்விட்டர்,இன்ஸ்ட்ராகிராம் பதிலளிக்காத நிலையில் இத்தகைய தளங்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கைள் எடுக்கப்படலாம்,அடுத்த 2 நாட்களில் தடை செய்யக்கூட வாய்ப்பிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…