வேளாண் சட்டங்களை முழுமையாக நீக்கும் வரை போராட்டம் தொடரும் என பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராஜேஷ் தீக்கெட் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது.
இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க கடந்த 8 ஆம் தேதி பாரத் பந்த் அறிவித்தனர். இதற்கு பல இடங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களை முழுமையாக நீக்கும் வரை போராட்டம் தொடரும் என பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராஜேஷ் தீக்கெட் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், வேளாண் சட்டங்களை நீக்குவதற்கு பதிலாக, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் மட்டுமே அரசாங்கம் அக்கறை உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…
கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில், உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…