பீகாரில் இன்னும் 3 கோடி வாக்குகளுக்கு மேல் எண்ணப்பட வேண்டிய காரணத்தினால், தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என கூறப்படுகிறது.
243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மெகா கூட்டணி. ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி (Mahagatbandhan) என்றும், பாஜக மற்றும் ஜே.டி.யு. கட்சி கூட்டணியின் பெயர், தேசிய ஜனநாயக கூட்டணி என்று அழைக்கப்படுகிறது.
இந்த தேர்தலில் 125+ இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை வகுத்து வரும் நிலையில், பீகாரில் பல இடங்களில் பாஜகவினர் ஆடல், பாடலுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இன்னும் 3 கோடி வாக்குகளுக்கு மேல் எண்ணப்பட வேண்டியதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த தேர்தலில் இதுவரை 4 கோடி வாக்குகள் பதிவான நிலையில், அவற்றில் 92 லட்சம் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளதாகவும், 3 கோடி வாக்குகளுக்கு மேல் எண்ண வேண்டியதுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், வழக்கமாக 26 சுற்றுக்களில் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், இந்த முறை 35 சுற்றுக்கள் மட்டுமே நடைபெற வேண்டியுள்ளதாகவும், சுற்றுக்கள் எண்ணிக்கை அதிகன் என்பதால் மாலைக்கு பிறகும் வாக்கு எண்ணிக்கை தொடரும் என தெரிவித்துள்ளார். இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுமென தெரிகிறது.
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென நயன்தாரா…
இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி…
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…