மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே தொடர்வாரா? – உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

Eknath Shinde

சிவசேனா கட்சி, சின்னம் ஏக்நாத் ஷிண்டேவுக்கா? உத்தவ் தாக்கரேவுக்கா? என்பது குறித்து  உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளிக்கிறது. நீதிபதிகள் எம்ஆர் ஷா, கிருஷ்ணா முராரி, ஹீமா கோலி, நரசிம்மாவும் தீர்ப்பளிக்கின்றனர்.

அதன்படி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்பட சிவசேனா எம்எல்ஏக்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. சிவசேனா கட்சி, சின்னம் ஏக்நாத் ஷிண்டேவுக்கா? உத்தவ் தாக்கரேவுக்கா? என்பது குறித்து தீர்ப்பளிக்கப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சியின் பெயர், சின்னத்தை தேர்தல் ஆணையம் ஏற்கனவே ஒதுக்கியிருந்தது.

இந்த நிலையில், ஷிண்டேவை தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே தகுதி நீக்கம் செய்யப்பட்டால் மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும். ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றதால் மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ந்தது.

அரசியல் குழப்பம் ஏற்படுத்தியதால் சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் பிறப்பித்ததை எதிர்த்து 16 பேரும் வழக்கு தொடுத்திருந்தனர். ஷிண்டேவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து சிவசேனா உத்தவ் தாக்கரேவும் ஏற்கனவே வழக்கு தொடுத்திருந்தனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே தொடர்வாரா? என உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு அளிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்