டெல்லியில் வெற்றி பெறுமா பாஜக? வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது.

delhi election date 2025 exit poll

டெல்லி :  மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கியிருந்த நிலையில், மக்கள் வேகமாக சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வந்தனர். இதில் மாலை 5 மணி வரை டெல்லி சட்டமன்றத்தில் உள்ள 70 தொகுதிகளில் மொத்தம் 57.70% வாக்குகள் பதிவாகியது. கடந்த 2020-ம் ஆண்டு 62% வரை வாக்குப்பதிவாகியிருந்தது. இந்த முறை அதைவிட குறைவாகத்தான் வாக்குபதிவு ஆகியுள்ளது.

இந்நிலையில், வாக்கு பதிவு நிறைவுபெற்று முடிந்த நிலையில், தற்போது, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்குப்பதிவுக்குகான பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.அதன்படி..

NDTV: NDTV-யின் கருத்துக்கணிப்பின்படி, பாஜக (BJP) 35 – 40 இடங்களில் முன்னிலை பெறும் எனவும்,  ஆம் ஆத்மி கட்சி ஆம் ஆத்மி (AAP) 32 – 37 இடங்களில் முன்னிலை பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Times Now: Times Now-வின் கருத்துக்கணிப்பின்படி,  கருத்துக்கணிப்பின்படி,பாஜக (BJP) 37 – 43 இடங்களில் முன்னிலை பெறும் எனவும், ஆம் ஆத்மி (AAP): 32 – 37 இடங்களில் முன்னிலை பெறலாம் எனவும், காங்கிரஸ் (Congress) 0 – 2 இடங்களில் முன்னிலை பெறும் எனவும் கூறப்படுகிறது.

ரிபப்ளிக் 

ஆம் ஆத்மி 10 – 19
பாஜக 35 – 40
காங்கிரஸ்0 – 1
மற்றவை  0

CNN 

பாஜக 44
ஆம் ஆத்மி 26
காங்கிரஸ் 0
மற்றவை 0

மேட்ரிஸ் 

பாஜக 35 – 40
ஆம் ஆத்மி 32 – 37
காங்கிரஸ் 0 – 1

பி-மார்க்

பாஜக 39 – 49
ஆம் ஆத்மி 39 – 49
காங்கிரஸ் 0 – 1

இந்துஸ்தான் டைம்ஸ்

பாஜக -51 -60
ஆம் ஆத்மி 10-19

சாணக்யா

பாஜக 39-44
ஆம் ஆத்மி 25-28
காங்கிரஸ் 2-3

இந்த கருத்துக்கணிப்புகள் பாஜக-க்கு முன்னிலை காட்டினாலும், இறுதித் தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8, 2025 அன்று அறிவிக்கப்படும். எனவே அப்போது தான் உண்மையில் எந்த கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்பது தெரியவரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்