மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா பாஜக? பிரச்சாரத்துக்காக வருகிறார் பிரதமர் மோடி!
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மே 1 முதல் 10 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி திட்டம்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் மே 10-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்ட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணியில், தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கான, வேட்புமனு தாக்கல் கடந்த 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர்கள் வேட்புமனுக்களை மனு தாக்கல் செய்து வருகின்றனர். ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
விலகும் நிர்வாகிகள்:
பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இன்னும் முழுமையாக வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அதுவும், விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் முன்னாள் முதலமைச்சர் முதல் அடிப்படை தொண்டர்கள் வரை பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து வருவது ஒருபக்கம் பரபரப்பாக உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம்:
மறுபக்கம், கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பாஜக சார்பில் பிரதமர், உள்துறை அமைச்சர், ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று, காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கு கர்நாடக தேர்தல் ஒரு முன்னோட்டமாக இருக்கும்.
தலைவர்கள் பிரச்சாரம்:
இதனால் தான் கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரம் கட்டி வருகிறது. அடுத்தடுத்து தலைவர்கள் கர்நாடகா சென்று பிரச்சாரம், கூட்டம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில், கர்நாடகா தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி அங்கு மே 1-ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் 10 நாட்கள் பிரசாரம் செய்யும் பிரதமர், 30 பிரசார கூட்டங்களில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.
பிரதமர் மோடி பிரச்சாரம்:
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடி 7 முறை கர்நாடகத்திற்கு வருகை தந்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒருமுறை சென்றுள்ளார். தற்போது மே 1 முதல் 10 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ளா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி, வருகிற 21, 22-ம் தேதிகளில் அமித்ஷா பிரசாரத்துக்காக கர்நாடகம் வருகிறார். இதுபோன்று ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்கள் பலரும் தேர்தல் பிரச்சாரத்தி ஈடுபட உள்ளனர். எனவே, கர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா? இல்லை காங்கிரஸ் முற்றுப்புள்ளி வைக்குமா? என எதிர்பார்க்கப்படுகிறது.