வெறிபிடித்த அனைவரையும் இப்படித்தான் கொள்ள வேண்டும்.. விவேக் ட்விட்..!
ஹைதராபாதில் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி உடல், கடந்த 28ஆம் தேதி பெங்களூர்-ஹைதராபாத் பாலத்தின் கீழ், எறிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தெலுங்கானா காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் அடிப்படையில், அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, எரிக்கப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில், முகமது ஆரிப் (26), சிந்தகுந்தா சென்னகேசவுலு (20), ஜொலு சிவா (20), ஜொலு நவீன் (20) என்ற நான்கு பெயரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்தநிலையில், இன்று அதிகாலை மூன்று மணியளவில் பிரியங்கா ரெட்டியை எரித்து கொன்ற இடத்தில், அந்த நான்கு பேரையும் காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் தப்பி ஓடிய நிலையில், அவர்களை சுட்டு கொன்றதாக காவல் துறையினர் கூறினார்.
இந்நிலையில், நடிகர் விவேக் இந்த என்கவுன்டர் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார். அதில் அவர், நீதி கிடைத்துவிட்டது. அந்த மருத்துவ சகோதரியின் ஆத்மா சாந்தியடையும். வெறிபிடித்த அனைத்து வக்கிரங்களுக்கும் இந்த சம்பவம் ஒரு பாடம் பிடிக்கும்! இந்த கடுமையான நடவடிக்கைக்கு காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு பெரிய வணக்கம். என பதிவிட்டிருந்தார்.
Justice served..! Peace to the soul of that Dr sister..! Will b a lesson to all sick minded perverts! A big salute to the police officials for this stringent action ???????? ???? ????
— Vivekh actor (@Actor_Vivek) December 6, 2019