கர்ப்பமான யானைக்கு வெடிமருந்தை உணவாக அளித்த காட்டுமிராண்டிகள்!

Default Image

கர்ப்பமான யானைக்கு உணவாக அளிக்கப்பட்ட வெடிமருந்து. 

இன்று காட்டில் வாழும் மிருகங்கள் மற்றும் பறவைகள் உணவை தேடி ஊருக்குள் செல்வதற்கு காரணம் நாம் தான். விலங்குகளின் வாழ்விடமான காடுகளையும், அவற்றின் அனைத்து வாழ்வாதாரங்களையும் மனிதர்களாகிய நாம் கொள்ளையடுவது தான் இதற்கு காரணம். 

இந்நிலையில், கேரள மாநிலத்தில், கர்ப்பமான காட்டு யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்ததால், அந்த யானைக்கு அங்குள்ள சிலர், அன்னாசிபழத்தில் வெடிமருந்தை வைத்து உணவாக அளித்துள்ளனர். இதனையடுத்து, இது யானையில் வாயில் வெடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனை உட்கொண்ட யானை, ஆறு ஒன்றில் நின்றபடி உயிரிழந்துள்ளது. யானைக்கு, நேரிட்ட இந்த கொடூரமான செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்