தேர்வில் ஏமாற்ற புளூடூத்துடன் அணிந்திருந்த விக் – UP மாணவரை பிடித்த போலீஸ்!

Default Image

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற இன்ஸ்பெக்டர் மெயின் தேர்வில் நூதன முறையில் ஏமாற்ற முயற்சி செய்த இளைஞரை பிடித்த போலீஸ்.

அரசுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் வழக்கமான காலியிடங்கள் மற்றும் தேர்வுகளை நடத்தக்கோரி சம்பந்தப்பட்ட மாநில அல்லது மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு நடைபெற்றது,அதில் மாணவர் ஒருவர் மேற்கொண்ட நூதன மோசடியை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

உ.பி சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கலந்து கொள்ள வந்த மாணவர்களை போலீசார் சோதனை செய்தனர்.அப்பொழுது 27 வயதுடைய இளைஞரை சோதனை செய்ததில் அவர் புளூடூத்து அமைப்புடன் தலையில் விக் அணிந்திருந்ததையும், காதில் இயர்போன் அணிந்திருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.இவர் தேர்வில் ஏமாற்ற ஒரு நூதன முயற்சியை மேற்கொண்ட செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அந்த மாணவனின் காதுக்குள் இருந்த இரண்டு ஏர்போட்களின் அளவு மிகவும் சிறியதாக இருந்ததால், அதை அந்த மாணவனின் காதில் இருந்து போலீசாரால் அகற்ற முடியவில்லை. இதுகுறித்த வீடீயோவை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மெயின் தேர்வுவில் நடத்த சீட்டிங் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை பலர் பகிர்ந்து வருகின்றன. இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ராஜஸ்தான் போலீசார் தேர்வின் போது ப்ளூடூத் கருவிகள் பொருத்தப்பட்ட செருப்புகளை அணிந்திருந்த 6 மாணவர்களை போலீசார் பிடித்தனர். இந்த தேர்வின்போது முதலில் ஒருவரை பிடித்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர் மேலும் ஐந்து மாணவர்களை பிடித்ததாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்