மனைவியின் தவறான நடத்தையால், வினோதமான தண்டனை கொடுத்த கிராம மக்கள்.
மத்தியப் பிரதேச மாநிலம், ஜாபுவா மாவட்டத்தில் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர், குஜராத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவன்-மனைவி இருவரும் வேலையை முடித்துவிட்டு இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், வேலை செய்யும் இடத்தில் மனைவி தவறான தொடர்பில் இருப்பதாக, நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர், அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவரது மனைவிக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்த கிராம மக்கள், கணவனை தூக்கி சாலையில் நடக்க வைத்துள்ளனர். மேலும் அவரின் பின்னால் சென்ற கிராம மக்கள் குச்சியால் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சிறிது தூரம் சென்றது கணவரின் எடை தாங்காமல் நிலைத்தடுமாறும் அந்த பெண்ணை கிராம மக்கள் குச்சி மற்றும் இதர பொருட்களால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த பெண்ணை காப்பாற்ற யாரும் முன்வராத நிலையில், இந்த காட்சியினை பாலரும் அந்த இடத்தில நின்று வீடியோ எடுத்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த விவகாரம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, அங்கு சென்ற காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் உட்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாஷிங்டன் : OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுடன் பயனர்கள் தொடர்பு…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…
கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…