அன்னையர் தினம் போல் ‘மனைவியர் தினம்’ – மத்திய இணை அமைச்சர் வேண்டுகோள்!
மனைவியர் தினம் கொண்டாட வேண்டும் என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள்.
மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, அன்னையர் தினத்துடன், மனைவி யர் தினத்தையும் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஒவ்வொரு ஆண்மகனின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார். தாய் உருவாக்கி தந்த வாழ்க்கையின் துணையாக முக்கிய கட்டத்தில் மனைவி வருவகிறார். ஒரு தாய் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள், ஒரு மனைவி தனது கணவனுக்கு நல்லது மற்றும் பாதகமான காலங்களில் துணை நிற்கிறாள். எனவே மனைவி தினத்தை நாம் கொண்டாட வேண்டும் என கோரினார்.
மத்திய அமைச்சர் அத்வாலே ஏற்கனவே பலமுறை அசாதாரண காரணங்களுக்காக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். கொரோனா வைரஸ் தொற்றுநோயின் முதல் அலையின் போது கோ கொரோனா கோ கீதத்தைத் தொடங்கிய அரசியல்வாதி அவர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த அத்வாலே, பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களின் கண்களைப் பறித்த தலித் தலைவர் ஆவார். தற்போது அன்னையர் தினம் போல் ‘மனைவியர் தினம்’ கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது பலரும் கவனிக்க கூடிய விஷயமாக உள்ளது.