மனைவி உடலுறவு கொள்ள மறுத்ததால் மனைவியை சுட்டு கொன்று விட்டு, 3 குழந்தைகளை கால்வாயில் வீசிய உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கால்வாயில் இருந்து 2 வயது குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாசண்டி கிராமத்தில் வசித்து வரக்கூடிய பப்பு குமார் என்பவரது மனைவி தான் டோலி. இவர்களுக்கு ஐந்து வயதில் சோனியா எனும் குழந்தையும், மூன்று வயதில் வான்ஸ் எனும் குழந்தையும், ஒன்றரை வயதில் ஹர்ஷிதா எனும் குழந்தையும் உள்ளனர். கடந்த 15 நாட்களாக குமாரின் மனைவி உடல்ரீதியாக உறவு கொள்வதற்கு பப்பு குமாரிடம் இணங்கி செல்லாமல் இருந்ததால், கோபம் அடைந்த குமார் கடந்த 2 தினங்களுக்கு முன் தனது மனைவியை சுட்டுக் கொன்றுள்ளார்.
மேலும், தனது மூன்று குழந்தைகளையும் தூக்கி கால்வாயில் வீசி எறிந்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரித்ததில் தனது மனைவியை கொன்றதையும் தனது குழந்தைகளை கால்வாயில் வீசியதையும் ஒப்புக் கொண்டிருந்தார். எனவே அவர் குழந்தைகளை வீசியதாக கூறப்பட்ட கால்வாயில் சடலங்கள் உள்ளதா என காவல்துறையினர் தேடி வந்த நிலையில், தற்பொழுது 2 வயதுடைய குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். இன்று…
டெல்லி : டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல்…
சென்னை : இன்று விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய நபர்கள்…
சென்னை : தமிழ்நாட்டில் 31 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
சென்னை : தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து கடந்த வருடம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார்…
சென்னை : கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது ஆதவ் அர்ஜுனா பேசிய…