அசாம் மாநிலத்தில் திருமணமாகி 10 ஆண்டுகளில் கணவரை விட்டு 25 முறை மற்றொருவருடன் தப்பி ஓடிய மனைவி.
மத்திய அசாமின் நாகான் மாவட்டத்தில் உள்ள திங் லாகர் கிராமத்தில் 40 வயதான பெண், 10 வருடங்களில் 25 முறை தப்பி ஓடி வெவ்வேறு ஆண்களுடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் மாஃபிசுதீன் கூறுகையில், 2011 ல் நாங்கள் திருமணம் செய்த பிறகு பத்து வருடங்களில் என் மனைவி சுமார் 25 முறை மற்றவர்களுடன் தப்பி ஓடிவிட்டாள்.
ஒவ்வொரு முறையும், குடும்பத்திற்கு திரும்பிய பிறகு, அவள் அதை மீண்டும் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்தாள். ஆனால் இதுவரை அவள் தன் உறுதிப்பாட்டை கடைபிடிக்க தவறிவிட்டாள். சில சமயங்களில் என் மனைவி தன் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றதாகக் கூறினாள். சில சமயங்களில் அவள் நோய்வாய்ப்பட்ட உறவினர்களைப் பார்க்கச் சென்றதாகக் கூறினாள்.
எங்களுக்கு மூன்று குழந்தைகள் என்றும் குழந்தைகளின் பராமரிப்பைக் கருத்தில் கொண்டு நாங்கள் அவளை ஒவ்வொரு முறையும் ஏற்றுக்கொண்டோம் எனவும் கணவர் மாஃபிசுதீன் தெரிவித்தார். செப்டம்பர் 4 சனிக்கிழமை அன்று நான் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, என் 3 மாத மகனை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு, தனது மனைவி ஓடிவிட்டாள் என்று என் தந்தையிடமிருந்து அறிந்தேன்.
பக்கத்து வீட்டில் உள்ள ஒரு பெண்ணிடம், தனது மனைவி ஆடுகளுக்குத் தீவனம் சேகரிக்கப் போவதாகச் சொல்லிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவள் எப்போது திரும்பி வருவாள் என்று தெரியவில்லை. கிளம்புவதற்கு முன், வீட்டில் இருந்து ரூ. 22,000 மற்றும் இதர பொருட்களை மனைவி எடுத்துச் சென்றதாக கணவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், நான் எனது மனைவியை உண்மையாக நேசிப்பதால் அவளை ஏற்றுக்கொள்வேன். எங்களுக்கு மூன்று சிறிய குழந்தைகளும் உள்ளன. நான் என் மனைவியை ஏற்கவில்லை என்றால் அவர்களை யார் கவனிப்பார்கள்? சட்ட மற்றும் பிற பிரச்சனைகளை தவிர்க்க நான் போலீசில் எந்த புகாரும் அளிக்கவில்லை என மனவேதனையுடன், உண்மையான காதல் வலியுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…