தனது மனைவி லேப்டாப் மற்றும் செல்போனை சோப்பு கொண்டு கழுவியதால் கணவர் விவாகரத்து கோரியுள்ளார்.
பெங்களூரு ஆர்த்தி நகர் காலனியைச் சேர்ந்த ராகுலுக்கும், சுமனாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, மென்பொருள் பொறியாளருமான ராகுல் அவரது மனைவியும் வேலையின் காரணமாக இங்கிலாந்து சென்றனர். எம்பிஏ பட்டதாரியான இவரது மனைவி வேலை செய்யாமல் வீட்டில் இருந்துள்ளார். வாழ்க்கையின் முதல் இரண்டு வருடங்கள் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்ததாக ராகுல் கூறுகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் குழந்தை பிறந்ததிலிருந்து அவரது மனைவியின் நடத்தை மாறியது. பின்னர் தனது மனைவிக்கு OCD இருப்பது கண்டறியப்பட்டதாக ராகுல் கூறினார். இதனால், தம்பதியினர் அடிக்கடி குடும்ப ஆலோசனை எடுத்து வந்தனர். பின்னர் அது முன்பு போலவே இருந்தது. இதற்கிடையில் இரண்டாவது குழந்தை பிறந்தது. இதனால் குடும்ப உறவு மீண்டும் சீர்குலைந்தது என ராகுல் கூறுகிறார்.
தனது மனைவிக்கு OCD இருப்பதால் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் கழுவி சுத்தம் செய்து சுத்தப்படுத்த ஆரம்பித்தால். லாக்டவுனில் வீட்டில் இருந்து வேலை செய்யும் போது தனது லேப்டாப் மற்றும் செல்போனை சோப்பு கொண்டு கழுவியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது மனைவி ஒரு நாளைக்கு ஆறு தடவைகளுக்கு மேல் குளித்த பின்னர், குளியல் சோப்பை சுத்தம் செய்ய மற்றொரு சிறப்பு சோப்பை பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும், தான் தாய் இறந்ததால் வீட்டை சுத்தம் செய்வதற்காக 30 நாட்கள் தானும், தனது குழந்தைகளும் வெளியே அனுப்பப்பட்டதாக ராகுல் கூறினார்.
அந்த விவாகரத்தை தன்னால் தாங்க முடியவில்லை. நவம்பர் மாதத்தில் மூன்று முறை கவுன்சிலிங் நடத்தியும் எந்த முடிவும் கிடைக்கவில்லை. இதனால் விவகாரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக ராகுல் கூறினார். தன் நடத்தையில் எந்த தவறும் இல்லை. விவாகரத்து பெற கணவர் பொய் சொல்வதாக மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…