மனைவி ஊரடங்கில் சிக்கிக்கொண்டார் – முன்னாள் காதலியை கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலம் பகுதியில் உள்ள பரத்புராவை சேர்ந்த தீரஜ் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கார்வை பகுதியில் உள்ள கிராமத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், தனது அம்மாவைப் பார்ப்பதற்காக தன் சொந்த கிராமத்திற்கு சென்ற தீராஜின் மனைவியால் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட பின் திரும்பி ஊருக்கு வர முடியவில்லை. இதனால் கணவர் போன் செய்து மனைவியை பரத்புராவிற்கு திரும்பி வருமாறு கூறியுள்ளார்.
நிலையை எடுத்துக் கூறவே கணவர் அதை பொறுத்துக் கொள்ளாமல் இன்னும் வரவில்லை என்ற காரணத்திற்காக அவரது முன்னாள் காதலியைத் தேடி சென்று அவரை இரண்டாவதாக திருமணம் செய்து விட்டார். தகவலறிந்த தீரஜின் மனைவி துல்ஹான் பஜார் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மிரட்டல் விடுக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.