முன்னாள் மத்திய அமைச்சர் பி.ஆர்.குமாரமங்கலம் அவர்களின் மனைவி கிட்டி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பிஆர் குமாரமங்கலம் அவர்களது மனைவி கிட்டி குமாரமங்கலம் அவர்கள் டெல்லியில் உள்ள வசந்த் விகார் எனும் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றி வரும் கிட்டியின் அவரது வீட்டில் சிலர் நேற்றிரவு கொள்ளை அடித்த பின்பு கிட்டியை கொலை செய்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் முன்னாள் மத்திய அமைச்சர் குமாரமங்கலம் அவர்களின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த ராஜு என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், கொலை தொடர்பாக இருவரை போலீசார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில் கிட்டி குமாரமங்கலம் வீட்டில் பணிபுரியக்கூடிய மஞ்சு என்னும் பெண் தங்களுக்கு தொலைபேசியில் அழைத்து தகவல் தெரிவித்ததாகவும், கைது செய்யப்பட்டுள்ள ராஜூ எனும் நபர் இரவு ஒன்பது மணி போல வீட்டிற்கு வந்ததாகவும் அதன் பின்பு அவரது உதவியாளர்கள் இருவரும் வீட்டிற்கு வந்ததாகவும் தன்னை தாக்கி விட்டு வீட்டிற்குள் சென்று கிட்டியை கொலை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கொள்ளையடிக்க வந்த ராஜு மற்றும் அவரது உதவியாளர்கள் நகை மற்றும் பணத்துடன் வெளியேறிய பின்பு வீட்டு பணிப்பெண் மஞ்சு தனது கட்டை அவிழ்த்துவிட்டு அருகில் இருந்தவர்களின் உதவியை நாடியுள்ளார். அதன் பின்பு இந்த சம்பவம் குறித்து கிட்டியின் மூத்த மகன் மோகன் குமாரமங்கலம் அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் காயம் ஏற்பட்டதால் கிட்டியின் வீட்டு பணிப்பெண் மஞ்சு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பி சென்ற இரு நபர்களை தேடி வருவதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…