கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த நக்சல் தாக்குதலில் உயிரிழந்த சிஏஎஃப் வீரரின் மனைவி.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்நிலையில் உலக அளவில், இதுவரை 3,220,268 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 228,224 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா நிவாரண நிதிக்காக, மக்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு, பிரதமர் மற்றும் அந்தந்த மாநில முதல்வர்களும் கூறியிருந்தனர். இதனையடுத்து, மக்கள் பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகிறனர்.
இதனையடுத்து, கடந்த மார்ச் 14-ம் தேதி பஸ்தாரில் நடைபெற்ற நக்சல் தாக்குதலில், சிஏஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது மனைவி, ராதிகா சாஹு, சத்தீஷ்கர் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 10,000 ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘என் கணவர் எப்போதும் மற்றவர்களுக்கு உதவுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதனால் தான் நான் இதை செய்ய முடிவு செய்தேன்.’ எனக் கூறியுள்ளார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…