நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட சந்தனா பவுரி எனும் தின கூலி தொழிலாளியின் மனைவி அவர் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்ட நிலையில், மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெற்றது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் தொகுதியில் சந்தனா பவுரி எனும் பெண் வேட்பாளர் சால்டோரா தொகுதியில் போட்டியிட்டார். இவர் மிக ஏழ்மையான பின்புலத்தை கொண்டவர் மட்டுமல்லாமல், இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஒரு தினக் கூலி தொழிலாளி தான். இவரது உழைப்பில் வரக்கூடிய சிறு வருமானத்தில் தான் சந்தனா அவரது மூன்று குழந்தைகளை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்.
இவர் வீட்டில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் கிடையாது. மண் வீட்டில் வசித்து வரக்கூடிய அவர்களது குடும்பத்தில் சந்தனா பவுரி கடந்த 2014ஆம் ஆண்டு அரசியலில் முதன்முதலில் ஈடுபட்டுள்ளார். அதனை எடுத்து 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் கிராம பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்ட இவர், தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இவருக்கு எதிராக போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சந்தோஷ்குமார் என்பவரை 4,145 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு வெறும் 31 ஆயிரத்து 985 மட்டும்தானாம். மேலும் இவருக்கு மூன்று ஆடுகள் உள்ளதாகவும் கூறியுள்ளார். இவ்வாறு ஒரு ஏழ்மையான நிலைமையில் வசித்து வரக்கூடிய சந்தனா வெற்றி பெற்றுள்ளது அங்குள்ள ஏழை மக்களின் வெற்றியாக அவர்களது தொகுதி மக்கள் கருதுவதுடன் சந்தனாவின் வெற்றியைக் கொண்டாடியும் வருகின்றனர்.
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…