பிரதமருக்கு ஏன் இந்த அதீத பயம்? – ராகுல் காந்தி ட்வீட்
அதானியின் போலி நிறுவனங்களில் உள்ள ₹ 20,000 கோடி பினாமி பணம் யாருடையது? என ராகுல் காந்தி கேள்வி
கர்நாடகாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
இந்த நிலையில், சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி தரப்பில் சூரத் மாவட்ட நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி குறித்து விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அதானியின் போலி நிறுவனங்களில் உள்ள ₹ 20,000 கோடி பினாமி பணம் யாருடையது? என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது ஏன்? 2000 சதுர கி.மீ நிலத்தை அபகரித்ததோடு, அப்பகுதியின் பெயர்களை மாற்றி வரும் சீனாவின் அத்துமீறல் குறித்தும் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்? பிரதமருக்கு ஏன் இந்த அதீத பயம்? என ட்வீட் செய்துள்ளார்.
20,000 करोड़ अडानी की शेल कंपनियों में बेनामी पैसे किसके हैं – प्रधानमंत्री चुप, कोई जवाब नहीं!
2000 sq km ज़मीन चीन ने छीन ली, जगहों के नाम भी बदल रहे – प्रधानमंत्री चुप, कोई जवाब नहीं!
प्रधानमंत्री जी, आख़िर इतना डर क्यों? pic.twitter.com/lBUIWczOGs
— Rahul Gandhi (@RahulGandhi) April 4, 2023