நீட் மசோதா நிராகரிப்பு ஏன் ! – திமுக எம்.பி க்கள் இரு அவைகளிலும் வெளிநடப்பு!

Default Image

தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான இரு மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்தது ஏன் என்று கேட்டு மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் திமுக எம்.பிக்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் 2017 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் இரு மசோதாக்கள் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர். 25 மாதங்களில் ஆகியும் மசோதா மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு மீது கடந்த வெள்ளி கிழமை நடந்த விசாரணையில், மத்திய அரசு இரு மசோதாக்களையும் நிராகரித்து விட்டதாக மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இன்று அவை கூடியதும் மக்களவையில் திமுக குழு தலைவர் டீ.ஆர்.பாலு அவர்களும் மாநிலங்களவையில் திருச்சி சிவா அவர்களும் கேள்வி எழுப்பினர். இதற்க்கு மத்திய அரசு சரியாக விளக்கம் அளிக்காத நிலையில் திமுக எம்பிக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்