பொதுவாக விமான நிலையங்கள் என்றால் சமதள நிலத்தில் தான் இருப்பது வழக்கம்.அதிலும் டேபிள் டாப் விமான நிலையங்கள் என்பது உயரமான மலைக்குன்றுகள் உள்ள இடங்களில் அமைந்து இருக்கும்.விமான தளங்களை சுற்றிலும் பள்ளத்தாக்கு அமைந்து இருக்கும்.சிறிது கவனம் சிதறினாலும் விபத்து நிச்சயம் என்ற நிலை தான் இந்த விமான நிலையங்களின் அமைப்பு ஆகும்.
பொதுவாக ஒரு விமானம் விமான நிலையத்தில் வேகமாக ஓடி வானில் பறப்பதற்கும், தரையிறங்கவும் நீளமான ஓடுதள பாதை தேவைப்படுகிறது.ஆனால் டேபிள் டாப் விமான நிலையங்களின் ஓடுதள பாதை சிறியதாக இருக்கும். இந்த விமான நிலையங்கள் விமானிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் விமான நிலையம் ஆகும். எனவே அனுபவமிக்க விமானிகள் மட்டுமே இந்த விமான தளங்களில் விமானங்களை இயக்க அனுமதிக்கப்படுவார்கள்.
கோழிக்கோடு டேபிள் டாப் விமான நிலையம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு குன்றின்மேல் அமைந்துள்ளது. நேற்று துபாயில் இருந்து “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கிய போது விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே கடந்த 2010-ஆம் ஆண்டு மங்களூரு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…