பாஜக தலைவர்கள்,ஆளுநருக்கு என்ன வேலை?- மம்தா பானர்ஜி கேள்வி…!
புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வருக்கு இடையேயான ஆய்வுக் கூட்டத்தில் பாஜக தலைவர்கள்,ஆளுநருக்கு என்ன வேலை? என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று யாஸ் புயல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களை மேற்பார்வையிட்டார். அப்போது புயல் குறித்த ஆய்வுகூட்டத்தில் பிரதமர் மற்றும் மேற்கு வங்க ஆளுநர், பாஜகவினர் வருகை புரிந்த நிலையில்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரை மணி நேர தாமதமாக வந்துள்ளார். மம்தா பானர்ஜி வந்தவுடன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கை ஒன்றை வழங்கிவிட்டு ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்காமல் சென்றுவிட்டார்.
இதனையடுத்து,ஆய்வுகூட்டத்தில்,பிரதமரின்,கவர்னர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோர் உள்ளனர்.அவரது இடப்பக்க இருக்கைகள் காலியாக உள்ளன.எனவே,இதுதொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு,பிரதமர் மற்றும் கவர்னரை,மம்தா அரை மணி நேரம் காத்திருக்க வைத்ததாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இதனை தொடர்ந்து அதிரடியாக மேற்கு வங்க தலைமை செயலாளர் அலபன் பண்டா பாத்யாயா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மத்திய அமைச்சர்கள்,பா.ஜ.க உறுப்பினர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,இதற்கு விளக்கம் அளித்துள்ள மம்தா பானர்ஜி,”புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வருக்கு இடையேயான ஆய்வுக் கூட்டத்தில் பாஜக தலைவர்கள்,ஆளுநருக்கு என்ன வேலை?
மேலும்,பிரதமரிடம் அனுமதி பெற்று விட்டு தான் கூட்டத்தில் இருந்து கிளம்பி,புயல் சேத நிலவரத்தை பார்வையிட நான் திகாவுக்கு சென்றேன்.நான் கிளம்பிய பின்பு காலி சேர்களை புகைப்படம் எடுத்துவிட்டு,அதனை பரப்பி என்னை அவமானப்படுத்துகின்றனர். ஒவ்வொரு முறையும் மத்திய அரசு ஏன் என்னை இப்படி குறிவைக்கிறது?.
வங்காளத்திற்கு பிரதமர் செய்த உதவிக்கு நன்றியாக அவரது கால்களைத் தொடுமாறு பிரதமர் என்னிடம் சொன்னால்,என் மக்களுக்காகவும் வங்காளத்தின் முன்னேற்றத்துக்காகவும் அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன், ஆனால் தயவுசெய்து இந்த மோசமான அரசியல் விளையாட்டுகளை விளையாட வேண்டாம்.கடுமையாக உழைக்கும் தலைமைச் செயலாளரை அவமானப்படுத்த வேண்டாம்.எனவே,தயவு செய்து தலைமைச் செயலாளரை எங்களிடம் திருப்பி ஒப்படையுங்கள்”,என்று கூறினார்.