அரசியல் தலைவர்களை உத்தர பிரதேசத்தில் அனுமதிக்க மறுப்பது ஏன்? – ராகுல் காந்தி

Default Image

லக்னோ சென்ற பிரதமர் மோடி லக்கிம்பூர் செல்லாதது ஏன்? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் மீதான வன்முறையின் பின்னணியில் கைது செய்யப்படவில்லை. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு அகங்காரத்தின் காரணமாக நிராகரிக்கிறது.

லக்கிம்பூர் செல்ல தனக்கு உத்தர பிரதேச அரசு விதித்த தடை உத்தரவு பொருந்தாது. விவசாயிகள் கொல்லப்பட்ட வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை. லக்கிம்பூர் சென்று உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளோம் என தெரிவித்தார்.

வன்முறைக்கு காரணமான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் கைது செய்யப்படவில்லை என குற்றசாட்டினார். எதிர்க்கட்சியின் பணியே அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தான். எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால் தான் இந்த அளவிற்கு கூட நடவடிக்கை எடுக்கப்பட்டியிருக்கிறது.

நேற்று லக்னோ சென்ற பிரதமர் மோடி லக்கிம்பூர் செல்லாதது ஏன்? கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் அரசு கட்டுப்படுத்துவதாகவும் விமர்சித்தார். அரசியல் தலைவர்களை உத்தர பிரதேசத்தில் அனுமதிக்க மறுப்பது ஏன்? என்றும் தடை மீறி லக்கிம்பூர் செல்ல ராகுல் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்