மேற்கு வங்கத்தில் மட்டும் 8 கட்ட தேர்தல் ஏன்? – மம்தா பானர்ஜி
மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும்போது, மேற்கு வங்கத்தில் மட்டும் 8 கட்ட தேர்தல் ஏன்?
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளன. இதனால், தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக வருகிறது.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி, மேற்குவங்க மாநிலத்தில் 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து, மார்ச் 27, ஏப்ரல் 1, 6,10, 17, 22, 26, 29 ஆகிய தேதிகளில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இதுகுறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ அவர்கள் கூறுகையில், மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும்போது, மேற்கு வங்கத்தில் மட்டும் 8 கட்ட தேர்தல் ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நான் மேற்கு வங்கத்தின் மகள், அனைத்து கட்ட தேர்தலிலும் வெல்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.