பி.எம். கேர்ஸ் நிதியை ஏன் இலவசமாக கொரோனா தடுப்பூசிக்கு பயன்படுத்த முடியாது? என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசின் மொத்த தவறான நிர்வாகத்தின் காரணமாக நாடு குழப்பத்தில் உள்ளது. கொரோனா முடிந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சர் கூறியிருந்த நிலையில், அவர் இதில் கவனம் செலுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேற்குவங்கத்தை கைப்பற்றும் முயற்சியில், பாஜகவினர் முழு நாட்டையும் குழப்பத்தில் தள்ளியுள்ளனர் என விமர்சித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் உலகளாவிய விலை நிர்ணயம் குறித்த தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி, தடுப்பூசிக்கு ஒரு நிலையான விலையை நிர்ணயிக்க நாங்கள் விரும்புகிறோம்.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா சமீபத்தில் தனது கோரோனா தடுப்பூசி கோவிஷீல்ட் மாநில அரசுகளுக்கு ஒரு டோஸுக்கு ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸுக்கு ரூ.600 என விலை அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்குவதற்காக ஏன் PM CARES நிதியை பயன்படுத்த முடியாது? என்று கேள்வி எழுப்பி, நாட்டில் பல பகுதிகளில் ஆக்ஸிஜன் மற்றும் தேவையான மருந்துகள் எதுவும் இல்லை. இந்தியாவில் மருத்துவ பற்றாக்குறை இருந்தாலும், மத்திய அரசு தொடர்ந்து மற்ற நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்கிறது என குற்றசாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தை தடை செய்வதற்கான தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொண்ட மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையம் பாஜகவின் உத்தரவின் பேரில் செயல்படுகிறது என்றும் பாஜகவுக்கு உதவுவதைத் தவிர எட்டு கட்டங்களில் தேர்தல்களை நடத்த எந்த காரணமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…