நீங்கள் ஏன் பிரதமராகக்கூடாது ?டிப்ஸ் கேட்டமாணவரிடம் நச்சுனு கேள்வி கேட்ட பிரதமர் மோடி

Default Image

டிப்ஸ் கேட்ட மாணவர் ஒருவருக்கு  பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

சந்திராயன் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில் அதன் முக்கிய பணியான நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது.

இந்த அறிய நிகழ்வை காண பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு சென்றார்.பிரதமருடன் நேரில் இந்த காட்சியை காண மாணவர்களுக்கு ஆன்லைன் விநாடி வினா போட்டி  நடத்தப்பட்டது.இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் சந்திராயன் -2 விண்கலத்தின் முக்கிய வேலையான விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் போது 2.1 கி.மீ தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது.இதனையடுத்து பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதற்கு பின் பிரதமர் அங்கு வந்திருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார்.அந்த சமயத்தில் அதிலிருந்த மாணவர் ஒருவர் ஜனாதிபதியாவதற்கு டிப்ஸ் கொடுங்கள் என்று பிரதமரிடம் கேட்டார்.மாணவரின் கேள்விக்கு ,ஏன்  நீங்கள் பிரதமராகக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் தான் நாட்டின் ஜனாதிபதியாக ஆவதே தனது லட்சியம் என்று தெரிவித்தார்.மேலும் அதற்கான வழிமுறைகள் என்னென்ன பின்பற்ற வேண்டும் என்று பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த பிரதமர்,வாழ்வில் மிகப்பெரிய இலக்கை குறிக்கோளாக வைத்து கொள்ளுங்கள்.அந்த குறிக்கோளை சிறிய சிறிய பகுதிகளாக பிரித்துக் கொள்ளுங்கள். சிறிய இலக்குகளை அடைய முயற்சி செய்யுங்கள்.ஆனால் அதில் ஏமாற்றத்தை ஒருபோதும் அனுமதிக்க கூடாது .அவ்வாறு செய்தால் நீங்கள் தவறவிட்டதை மறந்து விடுங்கள்  என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்