ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை..? – ராகுல் காந்தி பதில்
52 வயதாகியும் நான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன் என எனக்கே புரிந்து கொள்ள முடியவில்லை என ராகுல் பேட்டி.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் இத்தாலி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் உங்களுக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை என கேள்வி எழுப்பினர்.
எனக்கு குழந்தைகள் என்றால் பிடிக்கும்
பாரத் ஜோடா யாத்திரை
பாரத் ஜோடா யாத்திரை குறித்து அவர் பேட்டி அளித்திருந்தார். அவர் கூறுகையில் பாரத் ஜோடா யாத்திரையில் இருந்து இன்னமும் தனது தாடியை சேவ் செய்யாமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு யாத்திரை முழுவதும் தாடியை சேவ் செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன். தற்போது இந்த தாடியை வைத்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.
பிரதமர் மோடியை வீழ்த்த முடியுமா?
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்த முடியுமா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், பிரதமர் மோடி நிச்சயமாக தோற்பார் என்று நான் சொல்லவில்லை ஆனால் அவரை வீழ்த்த முடியும் என்று நான் உறுதியாக சொல்கிறேன். எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் நூறு சதவீதம் பிரதமர் மோடியை வீழ்த்த முடியும் என தெரிவித்துள்ளார்