தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றிய பிரியங்கா ரெட்டி.இவரது உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.இது குறித்து தெலுங்கானா மாநில காவல்த்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக வலைத்தளமான ட்விட்டரில் #RIPPriyankaReddy, #JusticeForPriyankaReddy என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.
இந்த நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.ஏனென்றால் இது போன்ற விஷயங்கள் நடக்க மீண்டும் மீண்டும் அனுமதிக்கிறோம். எதுவும் மாறவில்லை.இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக ஏன் நாம் கடுமையான சட்டங்களைக் கொண்டு வரக்கூடாது.பிறருக்கு எடுத்துக்காட்டாக அவர்களை ஏன் தூக்கிலிடக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார் .பிரியங்கா ரெட்டி விவகாரத்தில் உங்கள் கவனம் தேவை பிரதமர் மோடி அவர்களே என்று ஆவசேமாக பதிவிட்டுள்ளார்.
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…