ஏன் குற்றவாளிகளை தூக்கிலிடக் கூடாது? பிரியங்காரெட்டி மரணம் குறித்து ஹர்பஜன் சிங் ஆவேசம்

Default Image

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றிய பிரியங்கா ரெட்டி.இவரது உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.இது குறித்து தெலுங்கானா மாநில காவல்த்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக  வலைத்தளமான ட்விட்டரில்  #RIPPriyankaReddy, #JusticeForPriyankaReddy என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.


இந்த நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ஹர்பஜன் சிங்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.ஏனென்றால் இது போன்ற விஷயங்கள் நடக்க மீண்டும் மீண்டும் அனுமதிக்கிறோம். எதுவும் மாறவில்லை.இப்படிப்பட்ட  குற்றவாளிகளுக்கு எதிராக ஏன் நாம் கடுமையான சட்டங்களைக் கொண்டு வரக்கூடாது.பிறருக்கு எடுத்துக்காட்டாக  அவர்களை ஏன் தூக்கிலிடக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார் .பிரியங்கா ரெட்டி விவகாரத்தில் உங்கள் கவனம் தேவை பிரதமர்  மோடி அவர்களே என்று ஆவசேமாக பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்