மோடியின் விசாவை ஏன் ரத்து செய்ய கூடாது..? மம்தா பானர்ஜி கேள்வி..!

பிரதமர் மோடி நடத்தை விதிகளை மீறியுள்ளதால் ஏன்..? அவரது விசாவை ரத்து செய்யக் கூடாது என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
காரக்பூரில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவியும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், கடந்த மக்களவை தேர்தலின் போது வங்கதேச நடிகர் திரிணாமுல் காங்கிரஸ் பேரணியில் கலந்து கொண்டார். அப்போது பாஜக இதுகுறித்து வங்கதேச அரசுடன் பேசி அந்த நடிகரின் விசாவை ரத்து செய்தது.
தற்போது மேற்கு வங்கத்தில் சட்ட பேரவைத்தேர்தல் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி வங்கதேசம் சென்றுள்ளார். நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறியுள்ளதால் ஏன்..? அவரது விசாவை ரத்து செய்யக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார். விதிமீறல் குறித்து பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்திடம் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுக்க உள்ளோம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வங்காள தேசத்தின் 50-வது சுதந்திர தினம் மற்றும் வங்காள தேச தேசத் தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்ததை தொடர்ந்து நேற்று பிரதமர் மோடி வங்காள தேசம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025