மோடி அரசின் அராஜகம் எல்லை மீறுகிறது. பாஜகவின் தேர்தல் தோல்வி மட்டுமே இந்த தேசத்தை காப்பாற்றும்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து ராஜ்யசபாவில் உள்ள 12 எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கும் முன்பாக,அனைத்து விவாதத்திற்கும் நாங்கள் தயார் என்றார் பிரதமர் மோடி . ஆனால் எந்தவித விவாதமும் இல்லாமல் விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது. மோடி அரசு ஏன் விவாதங்களுக்குப் பயப்படுகிறது?
விவசாயிகளின் மற்ற முக்கியமான கோரிக்கைகளுக்கு மோடி அரசின் பதில் என்ன? குறைந்தபட்ச ஆதரவு விலை,விவசாயத்திற்கு எதிரான மின்சார மசோதா,போராட்ட வழக்குகளை திருப்பப்பெறுதல்,விவசாயிகளை படுகொலைக்குப் பின் உள்ள ஒன்றிய இணை அமைச்சர் பதவி விலகல் இவை பற்றி ஏன் மோடி அரசு பேச மறுக்கிறது?
இந்த கோரிக்கைக்காக நாடாளுமன்ற மாநிலங்களவையில் போராடிய காங் உள்ளிட்ட 12 எதிர்கட்சி எம் பி கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைத்து போராடுவது குற்றமா? மோடி அரசின் அராஜகம் எல்லை மீறுகிறது. பாஜகவின் தேர்தல் தோல்வி மட்டுமே இந்த தேசத்தை காப்பாற்றும்.’ என பதிவிட்டுள்ளார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…