20 ராணுவ வீரர்களை கொன்றதை நியாயப்படுத்த சீனாவை அனுமதித்தது ஏன் ? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய மற்றும் சீன இடையே லடாக் எல்லையில் நீண்டநாட்களாக பிரச்சினை இருந்து வருகிறது.இதன் ஒருபகுதியாகத்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் இரு நாடுகள் இடையே தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வந்தது.தொடர் பேச்சுவார்த்தையும் நடைபெற்று தான் வருகிறது.
இதற்கு இடையில் தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், இந்திய எல்லைக்குள் 20 ராணுவ வீரர்களை கொன்றதை நியாயப்படுத்த சீனாவை அனுமதித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.தேச நலனே மிக முக்கியம்,தேச நலனைக் காப்பது இந்திய அரசின் கடமை என்றும் சீன அதிகாரிகளுடன் பேசியபோது கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்குச் சொந்தம் என்பதை ஏன் வலியுறுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…