ஏன் காந்தியை மகாத்மா என்று கொண்டாடுகிறோம்….?

Default Image

மோகன்லால் கரம்சந்த் காந்தி அக்டொபர் 2ம் தேதி குஜராத் போர்பந்தரில் பிறந்தார். இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தருவதில் காந்தியின் கொள்கைகள், உலகில் வன்முரையால் எதையும் சாதிக்க முடியாது என அகிம்சை முறையில் தன் சுதந்திர போராட்ட கொள்கையை வகித்துக் கொண்டு, தன்னை பின்பற்றுபவர்களை கடைபிடிக்க சொன்னவர்.

Related image

இவரின் இந்த அகிம்சை கொள்கை இந்தியாவுக்கு மட்டுமல்ல, தென் ஆப்பிரிக்காவுக்கு சுதந்திரம் பெற்றுத்தர முக்கிய காரணமாக இருந்தது. 1920ல் காங்கிரஸ் தலைவரான காந்தி, இந்திய சுதந்திரத்தை வலியுறுத்தி தம் அகிம்சை போராட்டத்தை தீவிரப்படுத்தினார்.  1930ல் ஆங்கிலேய அரசு உப்புக்கு வரி விதித்ததை தொடர்ந்து அதை ஏற்க மறுத்து உப்பு சத்தியாகிரகம் நடத்தினார். மேலும் அந்நியர்கள் நமது நாட்டில் விளைந்த பொருட்கள் மீது வரிவிதிப்பதா என இந்த போராட்டத்தை மேற்கொண்டார்.

Image result for காந்தி

1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக “ஆகஸ்ட் புரட்சி” என அழைக்கப்படும் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தினை தொடங்கிய அவரின் மனஉறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில், காந்தியின் இடைவிடாத போராட்டத்தில் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் இந்திய சுதந்திர பிரகடனம் அரங்கேறியது.

இவரது இந்த அகிம்சை வழியிலான அர்பணிப்பான போராட்ட முறைகள் தான் அவரை மஹாத்மா என அழைக்க காரணமாயிற்று.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்