டெல்லி அரசு உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்கவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளளது. அதாவது, டெல்லியை ஹரியானா , ராஜஸ்தான் மாநிலத்துடன் இணைக்கும், பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பின் (ஆர்ஆர்டிஎஸ்) சாலை அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டது.
டெல்லியை மீரட்டுடன் இணைக்கும் 82.15 கிமீ நீள பாதைக்கு ரூ.31,632 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இதன் மூலம் டெல்லி – மீரட் தொலைவை 60 நிமிடங்களில் கடக்க முடியும் என கூறப்படுகிறது.
டெல்லி-மீரட் RRTS வழித்தட திட்டத்திற்கு மத்திய அரசு 5,687 கோடி ரூபாயும், உத்தரபிரதேச மாநில அரசு 5,828 கோடி ரூபாயும், டெல்லி மாநில அரசு 1,138 கோடி ரூபாயும் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 2019இல் உத்தரவிட்டது.
ஆனால் தற்போது வரை டெல்லி அரசு மேற்கண்ட நெடுஞ்சாலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. இது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு கடுமையாக விமர்சித்துள்ளது. நிதி அளிக்க முடியாத நிலையில் டெல்லி அரசு இருக்கிறதா என விமர்சித்துள்ளனர்.
முன்னதாக, டெல்லி சுற்றுச்சூழல் இழப்பீட்டு கட்டண நிதியில் இருந்து ரூ.500 கோடியை ஆர்ஆர்டிஎஸ் திட்ட்டத்திற்கு வழங்குமாறு டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் மேலும் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக டெல்லி அரசு விளம்பரத்திற்காக செலவு செய்த தொகையை இரண்டு வாரங்களுக்குள் பிரமாண பத்திரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு உத்தரவிட்டனர்.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…