ரஃபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் ரபேல் போர் விமான கொள்முதல் பற்றி பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் போர் விமானம் ஒன்றின் விலை 526 கோடி ரூபாயாக நிர்ணயிக்குப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறினார்.
ஆனால், பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று வந்த பிறகு, ரஃபேல் போர் விமானம் ஒன்றின் விலை ஆயிரத்து 600 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டதாக குற்றம்சாட்டினார். இந்த விலைக்கு வாங்க பாஜக அரசு முடிவு செய்தது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
126 ரஃபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்ட நிலையில், 36 ஆக குறைத்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி, இன்று வரை ஒரு ரஃபேல் போர் விமானம் கூட இந்தியாவிற்கு வரவில்லை என்றார். அனில் அம்பானி 45 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ள ஒரு தொழிலதிபர் என்றும் அவர் வினவினார்.
ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட 10 நாட்களில் உரிமம் கொடுத்தது ஏன், அரசு நிறுவனமான ஹெ.ஏ.எல்லிற்கு கொடுக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்தது ஏன் என்றும் ராகுல்காந்தி சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…