எதிர்க்கட்சி தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் ஒன்றிய அரசு, அதானி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? – நாராயணசாமி
அதானி பிரதமர் மோடியின் நிழலிலேயே தனது தொழிலை பெருக்கி, அனைத்து அரசு விதிமுறைகளையும் மீறி, இன்று ஒரு பணக்காரராக உள்ளார் என நாராயணசாமி விமர்சனம்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், காரைக்கால் துறைமுகத்தை அதானிக்கு புதுச்சேரி அரசு தாரை வார்த்துள்ளது ஓங்காரா நிறுவனத்தின் சக்திவேல் மூலம் ஏலம் எடுத்துப் பின்னர் அதானி குழுமம் கைப்பற்றியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மோடியின் நிழலில் அதானி
மேலும், எதிர்க்கட்சி தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் ஒன்றிய அரசு, அதானி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அதானி பிரதமர் மோடியின் நிழலிலேயே தனது தொழிலை பெருக்கி, அனைத்து அரசு விதிமுறைகளையும் மீறி, இன்று ஒரு பணக்காரராக உள்ளார்.
பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் நெருங்கிய தொடர்பு
இது சம்பந்தமாக விசாரிக்க பிரதமர் மோடியோ, மத்திய அரசின் எந்த பிரிவுகளும் தயாராக இல்லை. இவர் பிரதமருக்கு நெருக்கமானவர் என்பதால், அதானி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியை பற்றி குறை கூறும் மோடி, அதானி குறித்து கேட்கப்பட்ட எந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. இதிலிருந்து பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிகிறது என தெரிவித்துள்ளார்.