ரஃபேல் விவகாரம் : சிபிஐ இயக்குநரை இரவோடு இரவாக மாற்றியது ஏன்? ராகுல் காந்தி கேள்வி…!!
ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ இயக்குநரை இரவோடு இரவாக மத்திய அரசு மாற்றியது ஏன் என்று, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் உள்ள பர்சேத்பூர் என்ற இடத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ இயக்குநரை இரவோடு இரவாக நள்ளிரவு 1.30 மணிக்கு நீக்கியது ஏன் என்று கேள்வி எழுப்பினார் .
மேலும் அவர் பேசுகையில் இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பிரதமர் மோடி அஞ்சுகின்றார் என்று குற்றம் சாட்டினார். பிரதமர் மோடியின் ஆட்சியில் இளைஞர்களுக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டிய ராகுல் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாமல் தொழிலதிபர்களின் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்வதாக கடுமையாக சாடினார்.