உமர் அப்துல்லா ,மெகபூபா முப்தியை சிறை வைத்தது ஏன் ?டி.ஆர்.பாலு கேள்வி
இன்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை தாக்கல் செய்தார்.இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது.ஆனால் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு காங்கிரஸ் எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இது தொடர்பான விவாதத்தில் மக்களவை திமுக எம்.பி-க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் தலைவர்களான உமர் அப்துல்லா ,மெகபூபா முப்தியை நிலைமை என்ன? என்றும் வீட்டுக் காவலில் வைத்துள்ளீர்களா என்பதை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினரான பரூக் அப்துல்லா எங்கே? என்றும் கேள்வி எழுப்பினார்.தற்போது அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது என்றும் பேசினார்.