இந்தியா ஏன் 20 உயிர்களை இழந்தது ? ப.சிதம்பரம் கேள்வி
இந்தியா ஏன் 20 உயிர்களை இழந்தது ? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்நிலையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.அவரது பதிவில், சீன துருப்புகள் எல்லையத் தாண்டி இந்திய நிலப்பகுதியில் நுழையவில்லை என்று பிரதமர் திரு மோடி கூறியுள்ளார்.அப்படியென்றால், எதற்காக மோதல்? எதற்காக சண்டை? எதற்காக ராணுவ தளபதிகள் இடையே பேச்சுவார்த்தை? எதற்காக வெளியுறவுத் துறை அமைச்சரின் அறிக்கை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டார்களே, அது எங்கே நடந்தது? இந்திய நிலப்பகுதியிலா அல்லது சீன நிலப்பகுதியிலா? என்றும் இந்தியா ஏன் 20 உயிர்களை இழந்தது? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
PM said there is no foreigner (meaning Chinese) in Indian territory. If this is true, what was the fuss about May 5-6? Why was there a fight between troops on June 16-17? Why did India lose 20 lives?
— P. Chidambaram (@PChidambaram_IN) June 20, 2020