நீண்ட இடைவெளிக்கு பிறகு திறக்கப்பட்ட மதுக்கடையால், அளவுக்கு மீறிய குடி போதையில் குறுக்கே வந்த பாம்பை கடித்து குதறிய கர்நாடகாவை சேர்ந்த இளைஞர்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்ற நிலையில், சில இடங்களில் மக்களின் நிலை உணர்ந்து அரசாங்கம் அத்தியாவசிய கடைகள் மற்றும் மருந்தகங்கள் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக அடைக்கப்பட்ட மதுக்கடைகள் நேற்றுதான் கர்நாடகா, டெல்லி, அஸ்ஸாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அனுமதியுடன் திறக்கப்பட்டது.
இதனால் பல மீட்டர் வரிசையில் நின்றே குடிமகன்கள் தங்களுக்கு தேவையான சரக்குகளை வாங்கி வீட்டுக்கு சென்றனர். அது போல தான் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் மதுக் கடையில் மது வாங்கி குடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இளைஞர் ஒருவர் அப்போது எதிர்பாராதவிதமாக அவரது வாகனத்தில் சாலையை கடந்துள்ளார்.
அப்பொழுது, குறுக்கே ஒரு பாம்பு ஊர்ந்து சென்று உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், குடிபோதையில் என்னுடைய வழியில் நீ ஏன் குறுக்கே வந்தாய் என கூறிக்கொண்டே பாம்பை கடித்து குதற ஆரம்பித்துள்ளார்.
இவரது இந்த செயலால் பலர் பதறி அடித்து ஓடி இருந்தாலும், சிலர் அவரது இந்த செயலை வீடியோவாக எடுத்து இணையதள பக்கங்களில் பதிவிட்டு உள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…